வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஓழுங்கு செய்யப்பட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுடன் சந்திப்பும்; பாரட்டுவிழாவும்.

கனடாவில் கடந்த 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஓழுங்கு செய்யப்பட்டு புலம்பெயர்வாழ் வேலணை மக்களால், கனடா வருகை தந்திருந்த நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா சங்க தலைவர் திரு கனகரத்தினம் இதயராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேலணை மக்கள், பத்திரிகை ஆசிரியர்கள், சமூகசேவையாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். இச்சந்திப்பில் மா இளஞ்செழியன் அவர்களுக்கு சமுகசேவைப் பாரட்டுப் பத்திரம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார்கள். இந்நிகழ்வானது ஊரார் கூடி மகிழ்ந்த ஒரு உணர்வுகலந்த ஒரு சந்திப்பாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இவ்விழாவில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காண்கிறீர்கள்.
 
-வேலணை மைந்தன்-