வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன்

Velanai Perunkulam Sri Muththumari Amman

 

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2015

கொடியேற்றம் :
19-08-2015 - (Aug 19, 2015)
தேர்த்திருவிழா : 28-08-2015 - (Aug 28, 2015)

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி இன்றைய நிலவரம் Aug 14, 2015

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி இன்றைய நிலவரம் June 10, 2015

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி இன்றைய நிலவரம் (April 25, 2015)

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி இன்றைய நிலவரம் (2014)

________________________________________________

ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 28.08.2014 அன்று அத்திவாரம் இடப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

________________________________________________

இப்போதைய தோற்றம்


திருப்பணியின் பின் தோற்றம்

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2014

ஒரே பார்வையில் 2014 ஆண்டு திருவிழ

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2014

கொடியேற்றம் :
31-07-2014 - (July 31, 2014)
தேர்த்திருவிழா :
09-08-2014 - (Aug 09, 2014) More

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம்

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபை கூட்டம் புதன் கிழமை (14-05-2014) இன்று தலைவர் S P சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான்கு வீதியும் கொங்கிறீட்றிலான கூரை (concrete roof) போடுவதற்கம்  நிலத்திற்கு ரெரசோ (terrazzo flooring) பதிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டு இவ் வேலைத்திட்டங்களுக்கு பல கேள்வி கோரல்கள் பெறப்பட்டதில் இருந்து குறைவானது தெரிவு செய்யப்பட்டுள்ளது. வேலை முற்றிலும் பூர்த்தியாக்குவதற்கு கிட்டத்தட்ட 4 கோடி ரூபா தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் பெருங்குளம் முத்துமாரியின் அடியார்கள் பங்களிப்புடன் பூர்த்தியாக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாளின் அடியார்களே,

உங்கள் அனைவரினது ஒத்துழைப்புடன் இந்திருப்பணி இவ்வருட மகோற்சவ முடிவடைந்தவுடன் ஆரம்பித்து ஒரு வருடத்தில் பூர்த்தியாவதுக்கு அம்மாளின் அருளை வேண்டிநிற்கின்றோம். மேலதிக விபரங்கள் உங்கள் பார்வைக்கு மிக விரைவில்..........

________________________________________________

ஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா

________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த
மகோற்சவ விஞ்ஞாபனம்
2013

கொடியேற்றம் :
10-08-2013 - (Aug 10, 2013)
தேர்த்திருவிழா :
19-08-2013 - (Aug 19, 2013)

________________________________________________________________________________________________

வேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஜயதசமி - வாழை வெட்டு இன்று (Oct 24,2012) சிறப்பாக நடைபெற்றது. More Info

________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (31-07-2012)

மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2012 / ஒளிப்பதிவுகள 2012

________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த இன்று
மகோற்சவவிஞ்ஞாபனம் கொடியேற்றத்திருவிழா
இன்று (22-07-2012)

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த
மகோற்சவ விஞ்ஞாபனம்
2012

கொடியேற்றம் :
22-07-2012 - (July 22, 2012)
தேர்த்திருவிழா :
31-07-2012 - (July 31, 2012)

_______________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2011

கொடியேற்றம் :
03-08-2011 - (August 03, 2011)
தேர்த்திருவிழா :
12-08-2011 (August 12, 2011)

________________________________________________________________________________________________

வேலணை அம்மன் கோவில் மலர் E-Books

கடந்தகால மலர்கள் அழிந்து போகாமல் பாதுகாக்கவும், என்றும், எப்போதும், எங்கும்   கிடைக்க கூடியதாக E-Book ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. இராஜகோபுர மலர் (2010) Part1 Part2 Part3
2. கும்பாபிஷேக மலர் (1986)
3. தேர் மலர் வெளியீடு (1973) Part1 Part2


________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ராஜகோபுர கும்பாபிசேக கோபுரதீபம் சிறப்பு மலரும் கணக்கறிக்கையும் 12-09-2010 இல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இச்சிறப்பு மலர்கள் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய,

இராஜகோபுர கும்பாபிஷேக பெருவிழா

02-07-2010 - வெள்ளிக்கிழமை (July 02, 2010 - Friday)

அம்பிகை அடியார்களே,

தெய்வீக அருட்தலங்கள் பல விளங்கும் இலங்கையின் வடபால் யாழ்ப்பாண இராசதானியாம் கோட்டையில் இருந்து மணிபல்லவமாம் நாகதீவிற்கும், நயிணை நாகபூஷணிக்கும் செல்லும் வழியில் அமைவுறும் தீபகற்பத்தில் தனவந்தர்களும், கல்விமான்களும், சைவசீலர்களும், தமிழ்ப்பற்றாளர்களும், விவசாயிகளும் நிரம்பி, பல திருக்கோயில்கள் உள்ளதாற் சிறப்புற்று, சைவ மணங்கமழும் புண்ணிய பூமி வேலணை கிழக்குப் பகுதியில், நெடுங்குளத்தைத் தீர்த்தமாகக்கொண்டு, பெருங்குளம் எனத் தலப்பெயர் கொண்டும் அமைவுறும் பதியில் தாயாரின் கருணை வடிவாகச் சக்தியின் அருட்தோற்றமாக ஸ்ரீ முத்துமாரியம்மனாகக் கோயில்கொண்டு வீற்றிருந்து அருள்பொலியும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அழகுறப் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, தரிசிக்கக் கோடி புண்ணியம் தரும், கண்டோர் வியக்கும் வண்ணம் இந்தியச் சிற்பக் கலைஞர்களின் சிந்தனையிலும், கற்பனை கைவண்ணத்திலும் சப்ததள இராஜகோபுரம் வானளவாக உயர்ந்து, அன்னையின் அருள் வடிவாள் உருவங்களைத் தாங்கி நிற்க மேற்படி ஆலயம் புதுப்பொலிவுடன் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கூடவே பரிவார தேவர்களுக்குத் திருக்கோயில் அமைவுசெய்யப்பட்டு, இராஜகோபுர கலசங்களுக்கும், அன்னை முத்துமாரி அம்பாளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் (பிள்ளையார், சந்தான கோபாலர், கருமாரி அம்பாள், முருகன், சனீஸ்வரன், நவக்கிரக நாயகர்கள், வைரவர், சண்டேஸ்வரி முதலான அனைத்திற்கும) தாயாரின் திருவருட்சக்தி பொலியும் வண்ணம் மகாகும்பபிஷேகப் பெருவிழாவானது நிகழ்வுறும் மங்கலமிகு விகிர்தி வருஷம் ஆனிமாதம் 18ஆம் நாள் (01-07-2010) வெள்ளிக்கிழமை சதய நட்சத்திரமும், ஷஷ்டித் திதியும், சித்தயோகமும் கூடிய நன்நாளில் சுந்தரராஜ கோபுரத்திற்கு காலை 8:20 மணிக்குவரும் சுபநேரத்திலும், மூல ஆலய ஸ்ரீ முத்துமாரியம்பாள் கூடவே பரிவார மூர்த்திகளுக்கும் காலை 8:45 மணிமுதல் 9:40 மணிக்குள்வரும் சிங்க லக்கின சுப முகூர்த்தத்ற் பெருஞ்சாந்தி அருள் விழவாகிய மகா கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது. பெருங்குளம் தாயாரைக் குல தெய்வமாகக் கொண்டு போற்றி வழிபடும் அடியார்களும், ஏனைய அம்பிகை வழிபாட்டாளர்களும் இப்புண்ணிய நேரத்தில் வருகைதந்து தரிசித்து அருள் பெறுமாறு வேண்டுகிறோம்.

________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்

கொடியேற்றம் : 14-08-2010 - சனிக்கிழமை (August 14, 2010 - Saturday)
தேர்த்திருவிழா : 23-08-2010 - திங்கட்கிழமை (August 23, 2010 - Monday)

________________________________________________________________________________________________

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2009

(Amman Festival 2009)

________________________________________________________________________________________________

Ntyiz ngUq;Fsk; = Kj;Jkhhp mk;kd; tUlhe;j kNfhw;rt tpQ;Qhgdk;

(Amman Festival 2008)

nfhbNaw;wk; : 06-08-2008 (Gjd;fpoik)

Njh;j;jpUtpoh : 14-08-2008 (nts;spfpoik)

 

 
.: Velanai Amman:.
 
அம்மன் ஆலய திருப்பணி 2015
அம்மன் ஆலய திருப்பணி 2014
 
Old Gallery
 
Kopura Project
.:Photos:.

 

 
Amman Festival 2014
 
Amman Festival 2013
 
Amman Festival 2012
 
Amman Festival 2011
 
Amman Festival 2010 - 1
 
Amman Festival 2010 - 2
 
எண்ணெய்க்காப்பு படங்கள் July 01, 2010
 
கும்பாபிஷேக படங்கள் July 02, 2010
 

இராஜகோபுர  படங்கள் July 05, 2010

 
Amman Temple Photos 2010
 
Photos - April 6, 2004

Amman Festival 2003

 
Raja Kopura Project
.:Contact:.
 
E-mail

New Updated Rajakopura Letter

New estimate RS 15.2 million
 

வேலணை அம்மன்

 கோவில் மலர்கள்

(e-Books)

 

அம்மன் திருவிழா

திருவிழா - Part1

திருவிழா - Part2

திருவிழா - Part3

திருவிழா - Part4

திருவிழா - Part5

திருவிழா - Part6

திருவிழா - Part7

திருவிழா - Part8

திருவிழா - Part9

VelanaiAmman.comę2003 - 2014. All Rights Reserved. Comments Welcome